உணவின் அறுசுவைகளில் முக்கிய இடம்பிடிப்பது உப்பு. அந்த உப்பு தயாரிக்கும் தொழில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது.அரசு உப்புமீது உற்பத்தி வரி ஏதும் விதிப்பதில்லை. உப்பிலிருந்துதான் காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், குளோரின் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுதோறும் 59 லட்சம் டன் உப்பு நேரடியாக உண்ணப்படுகிறது. தொழில்துறை பயன்பாட்டுக்கு 107 லட்சம் டன் அளிக்கப்படுகிறது. சுமார் 35 லட்சம் டன் ஏற்றுமதியாகிறது.
உப்பளங்களில் உப்பு தயாரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘கடல் நீரை பாத்தி கட்டி பாய்ச்சி, நீர் ஆவியானதும் படிந்திருக்கும் உப்பை வெட்டி எடுக்கிறார்கள்’ என்றே நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இது ஓரளவே சரியானது. இதற்குப் பிறகும் சில படிமுறைகள் கையாளப்பட்டே தயாரிக்கப்படுகிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?.
பாத்திகளில் படியும் உப்பு சுத்தமற்றதாகும். அசுத்தங்களை நீக்குவதற்காக அந்த உப்புக் கரைசலுடன் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை செலுத்துவார்கள். பின்னர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் கழுவி, நன்கு உலர்த்துவார்கள். பின்னர்தான் சமையலில் சேர்க்கப்படும் உப்பு கிடைக்கிறது.
உப்பு உற்பத்தி தொடர்பான கீழுள்ள பயனுள்ள ஆவணத்தினை கிளிக் செய்து பார்வையிடுங்கள்.