ஷாஹானி மார்கஸ் பிறந்து வளர்ந்த இடம் இலங்கை ஆகும். டாக்டர் குடும்பத்தில் பிறந்ததால் இவரும் டாக்டர் ஆகியிருக்க வேண்டியது. அப்படி ஆகியிருந்தால் விர்சுசா(Virtusa) நிறுவனத்தில் தலைமை பொறியாளராகியிருக்க முடியாது. இலங்கை ஐசிடி ஏஜென்சியில் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆகியிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் கொழும்பு ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் மேலாண்மை உறுப்பினர்களுள் ஒருவராகவும், மூத்த மின் ஆளுமை ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தில் இருந்திருக்கிறார், ராயல் கவர்மண்ட் ஆஃப் பூடானில் ஆலோசகராகவும் பின்னர் மூன்று நிறுவனங்களின் இணை நிறுவனராகவும் இருந்திருக்கிறார்.
இன்று மிகச்சிறப்பான இடத்தில் இருந்தாலும், இவரின் கல்வி சூழலோ, பணிச்சூழலோ வேதனை மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. இவர் பெண் என்பதால் பாலியல் பாகுபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முன்னேறி இன்று இலங்கையிலுள்ள ஆயிரகணக்கான பெண்களின் முன்மாதிரி என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.
பள்ளி பருவ காலத்திலேயே வேகமான வாசிப்பு திறன் மிக்கவராக இருந்தார் ஷாஹானி. டைம் இதழ், நியூஸ்வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் மேல் அட்டையிலிருந்து கடைசி அட்டைவரை படிக்கக்கூடிய இயல்புடையவராக இருந்தார். இலங்கையில் அந்த சமயத்தில் தான் தொலைக்காட்சிகள் வந்திருந்தன, இணையம் வந்திருக்கவில்லை. பத்திரிக்கைகள் மூலமாக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மாறுதல்களை தெரிந்து கொண்டிருந்தார். பின்னாளில் அங்கே சென்று கணினித்துறை பற்றி கற்கவும், வசிப்பதற்கும் ஆசைப்பாட்டர். ஆனால் இவரின் பெற்றோர்களோ இவரை டாக்டராக்கி பார்க்கவே ஆசைப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் பெண்ணாக இருப்பதால் இலங்கையை விட்டு வெளியேறும் முடிவை எடுக்குமளவு துணிச்சல் வாய்த்திருக்கவில்லை.
பத்தாம் வகுப்பு முடித்ததுமே, கணிதம் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தார். இது மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான கதவை திறந்துவைத்தது. பின்னர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மண்ட் (NIBM) கணினி வடிவமைப்பு துறையில் பட்டயப்படிப்பு வழங்கியது. இந்த துறையிலுள்ள எதிர்காலம் ஷாஹானியின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்தது. NIBMல் முதல் மாணவராக தேறினார் என்பதால் அந்த நிறுவனத்தின் தலைமை, மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல அறிவுறுத்தியது.
மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இவரின் திட்டத்தை இவரது பெற்றோர் எதிர்த்தனர். சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு தேர்ச்சியடைந்ததால் இவர் சட்டம் தான் படிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இது ஷாஹானியின் பெற்றோர்களை NIBMன் தலைவர் முன் நிறுத்தியது. அவரிடம் பேசிய பிறகு ஷாஹானியை அமெரிக்கா அனுப்ப சம்மதித்தனர்.ஷாஹானி மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு விண்ணப்பித்த சில நாட்களிலேயே துரதிர்ஷ்டவசமாக அவரின் தந்தை இறந்தார். இவரின் நிதி நிலை மோசமானது, இதன் காரணமாக அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து இறந்த தந்தையினை பார்க்க வந்த ,மருத்துவர் ஊடாக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஷாஹானி அமெரிக்காவில் பர்டுயு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்க சென்றபோது மிகக்குறைவான பெண்களே பொறியியல் படிக்கிறார்கள் என்பதை கவனித்தார்.
கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டப்படிப்பையும், கணிதத்தில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். பர்டுயுவில் பி.எச்டி படித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவரையே மணந்தார். இவர் பிஎச்டி முடித்த சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார்.
ஷாஹானி, பகுதியளவு வகை சமன்பாட்டு தீர்வுக்கான இணை மென்பொருள் மறுபயன்பாடு சார்ந்த ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் வழக்கமான ப்ரோக்ராம்களான சி, ஜாவா மற்றும் பெர்ல் போன்றவற்றை அறிவியல் கணக்கீட்டிற்கும், கலப்பு சூப்பர் கம்ப்யூட்டர்களின் அறிவியல் மென்பொருளின் அணிதிரட்டியான அட்மின் மாட்யூல்களில் எப்படி பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
.
1997ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் ஆராய்ச்சி மையத்தில் ஆலோசகராக சேர்ந்தார். 1999ம் ஆண்டு பி.எச்டி முடித்த பிறகு ஒரு புது நிறுவனத்தில் முக்கியபொறியாளராக ஓராண்டு பணியாற்றினார். பின்னர் இலங்கை குழுவின் தலைமை கட்டுமானபொறியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாஸ்டனில் சிலகாலம் பணியாற்ற அனுமதியளித்தார்கள்.
ஐந்தாண்டுகள் விர்சுசாவில் பணியாற்றிய பிறகு இலங்கையிலிருந்த இவரின் குழுவின் எண்ணிக்கை 200லிருந்து 1000மாக உயர்ந்தது. ஒரேநேரத்தில் 20 திட்டங்களை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். இவரின் குழுவுக்கான வேலைகளை உருவாக்குவதிலும், அவர்களின் பணித்திறனை அளவிடும் பணியிலும் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் மென்பொருள் உருவாக்கம் மற்றும் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார். இவரின் பதவிக்காலத்தில் தான் இலங்கையின் எல்லா கணினியையும் இணைக்கும் முயற்சியான லங்காகேட் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவர் பாடம் நடத்துபவராகவும், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவராகவும் இருந்ததால் ஐடி துறை இவரை தகுதிக்கு மீறிய திறன் பெற்றவராக(overqualified) கருதியது. எனவே ஆக்செண்டா(Auxenta) என்ற நிறுவனத்தை துவங்கினார். நிறுவனங்களின் எரிவிகிதத்தை (burn-rate)குறைக்கும் வேலையில் இயங்கினார்கள்.
ஷாஹானி இப்போது பல பெண்களை சந்தித்து உரையாடுகிறார், அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகவும் ஆலோசகராகவும் இருக்கிறார். ஐடி தொழில்நுட்பத்தின் சக்தி மீதும் மின் ஆளுமையின் எதிர்காலத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுவது என்பதே அதற்கு காரணம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்பது பெண்கள் பணியாற்ற ஏற்ற இடம் என்கிறார் ஷாஹானி. காரணம் இந்த தொழிலில் வீட்டிற்கும் நேரம் ஒதுக்க முடிவதே, இது ஒரு மருத்துவராலோ, சட்டவல்லுனராலோ முடியாத காரியம் என்கிறார்.
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதில் பணியாற்றும் குழுவை பொறுத்தே அமையும் என நம்புகிறார். அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதே வெற்றியை தீர்மானிக்கும். ஒருவர் விரைவில் வெற்றிபெற வேண்டுமானால் தன்னுடைய வழிகாட்டிகளிடம் உரையாட வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்கிறார். அவர்களே உங்களை அனுபவத்தை நோக்கியும், சவால்களை நோக்கியும் உந்தித்தள்ளுவார்கள் என்பதே ஷாஹானியின் கருத்து.